மொட்டு’ கூட்டணியை பலவீனப்படுத்தும் சு.க. இராஜாங்க அமைச்சர் திலும் குற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியைப் பலவீனப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கூட்டணிக்குள் காணப்படும் பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே தீர்வு கிட்டும் என்றும், கூட்டணியின் உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் அரசில் இருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

குறித்த சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினரது செயற்பாடு குறித்து கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் இணைந்து பயணிக்க வேண்டும் எனக் கருதியே சுதந்திரக் கட்சிக்கு மக்கள் ஆதரவை வழங்கினார்கள் என்றும், அந்த ஆணைக்கு அவர்கள் மதிப்பளித்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir