ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான விடயத்தில் அரசாங்கத்தினை பிழை சொல்ல முடியாது

 

அரசாங்கமானது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறக்கின்ற ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்திருந்தது.அரசாங்கத்தினை இவ்விடயத்தில் பிழை சொல்ல முடியாது.கடந்த காலங்களில் கூட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ கூட ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஏற்றுக்கொண்டிருந்தார் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும் என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

ஜசாசா விடயத்தில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் முகமாக அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை(3) மதியம் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது –

முஸ்லீம் சமூகம் நீண்டகாலமாக எதிர்பார்த்த செய்தி ஒன்று நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.அது தான் கொரோனாவினால் மரணிக்கும் ஜனாசாக்களை அடக்கலாம் என்று அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுத்துள்ளதாகும்.அரசாங்கத்திடம் இதே இடத்தில் இருந்து தான் இவ்விடயம் குறித்து வர்த்தமானி அறிவித்தலை விடுமாறு கோரிக்கை ஒன்றினை நாம் விடுத்திருந்ததை நீங்கள் அறிவீர்கள்.அந்த வகையில் அப்போது சொன்னோம் மஹிந்த ராஜபக்ச அவர்கள் மிக தெளிவாக பாராளுமன்றத்தில் ஜனாசா நல்லடக்கம் செய்வதற்காக இடம் தருவதாக கூறியிருந்தார்.ஆனால் இடையில் ஒரு சிலர் குழப்பி விட்டதன் காரணமாக அது தடங்கல் ஏற்பட்டு இப்பொழுது வர்த்தமானி அறிவித்தல் வந்ததன் மூலம் 100 வீதம் கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டு இறக்கின்ற ஜனாசாக்களை அடக்கம் செய்வதனை உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த வகையில் முதலில் இவ்விடயத்திற்காக எல்லா வல்ல இறைவனுக்கு உலமா கட்சி நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது.அரசாங்கமானது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறக்கின்ற ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்திருந்தது.அரசாங்கத்தினை இவ்விடயத்தில் பிழை சொல்ல முடியாது.கடந்த காலங்களில் கூட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ கூட ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஏற்றுக்கொண்டிருந்தார் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும் .இடையில் எதிர்கட்சிகளின் செயற்பாட்டினால் தான் தடைக்கல் ஏற்பட்டு நீண்டு இப்பிரச்சினை சென்றுள்ளது என கூறலாம்.ஆனால் இப்பொழுது தடைக்கல் நீக்கப்பட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையின் பின்னர் இந்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.எனவே இதனை அவரது வருகையினால் கிடைத்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. என்றார்

You May Also Like

About the Author: kalaikkathir