இன்று கலை 9 மணி முதல் 20 மணிநேர நீர் விநியோகத்தடை!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று கலை 9 மணி முதல் 20 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தளையில் இருந்து கொலன்னாவை வரையில் நீரை கொண்டு செல்லும் குழாயில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக குறித்த நீர் விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளது.

இதற்கமைய, கொலன்னாவை நகர சபை, இராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 20 மணி நேர காலப்பகுதிக்கு நீர் விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir