சகல அரச நிறுவனங்களும் இன்று முதல் ஆரம்பம்!

சகல அரச சேவையாளர்களும் இன்று முதல் பணிக்கு திரும்பவுள்ளதுடன், அரச நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் வழமையான செயற்பாடுகளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் சேவையினை முறையாக முன்னெடுத்து செல்வதன் ஊடாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நேரம் வந்துவிட்டதாக அந்த அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான சுற்றுநிருபம் கடந்த 5 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது சகல அரச அதிகாரிகளின் கடமையாகும்.

அது தொடர்பான பொறுப்பு சகல அரச நிறுவனங்களினதும் பிரதானிகளுக்கும் உண்டு என ஜே.ஜே.ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir