வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் ஒருவருக்கு கொரோனா!

வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலருக்கு எழுமாறான முறையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.அதன் முடிவுகள் நேற்றையதினம் வெளிவந்திருந்தது. அதனடிப்படையில் அங்கு பணியாற்றும் வவுனியா சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனினும் குறித்த ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir