எரிந்த நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலம்

பகுதியளவில் எரிந்த நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொஹுவலை – கலுபோவில பகுதியில் வெகன் ஆர் ரக காரொன்றில் குறித்த வர்த்தகரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிித்தார்.

நேற்றிரவு 11.30 மணியளவில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிித்தார்.

குறித்த கார் முழுவதுமாக தீக்கிரையாகியிருந்ததாகவும், மற்றும் உயிரிழந்த நபரின் சடலமும் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

33 வயதுடைய கலுபோவில – பாத்திய மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கொஹுவலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir