கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இன்று மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை, பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (13) சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சபரகமுவ, மேற்கு மற்றும் வயம்ப மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இன்று (13) பி.ப. 1.00 மணியின் பின் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இப்பிரதேசத்தின் அநேக பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளைக் கையாளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir