க .பொ .த உயர்தர பரீட்சையை ஒத்திவைப்பதற்கு தீர்மானம்!

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளையும், ஐந்தாம் வகுப்புக்கான புலமைப்பரிசில் பரீட்சைகளையும் ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக பாடத்திட்டங்களை எதிர்வரும் ஒகஸ்ட் மாத்திற்குள் நிறைவு செய்வது சவாலானது என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir