மாகாணசபை தேர்தல் தொடர்பில் தீர்மானம் இல்லை

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்டு வருகின்றது. எனவே, புதிய அரசமைப்பின் பிரகாரம் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி அதன் பின்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir