ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கட்டாக்காலி கால்நடைகளால் மக்கள் அசௌகரியம்

ஆலையடிவேம்பு பிரதான வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளினால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால் நாளாந்தம் பல்வேறு விபத்துக்களை பொதுமக்கள் எதிர்கொண்டு வருவதுடன் வீதிகளும் அசுத்தமாக மாறி வருகின்றது.

இரவுவேளை மாத்திரமன்றி பகல் நேரத்திலும் அதிகளவான கால்நடைகள் வீதிகளில் அலைந்து திரிவதை அவதானிக்க முடிகின்றது.

எனினும் இதுவரையில் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலகங்களோ அல்லது அதிகாரிகளோ பாதுகாப்பு தரப்பினரோ நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இதனால் ஏற்படப்போகும் விபத்துக்களில் உயிரிழப்புக்கள் ஏற்படுவதை தடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

எனவே இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் கால்நடை உரிமையாளர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir