மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதி, பெரிய கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிளை மோதியதில் ஊடகவியளார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் , மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை காபர் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஊடகவியலாளர் மிதுன் என்றழைக்கப்படும் ஈ.மிதுன்சங்கர் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த, ஊடகவியலாளர் மற்றும் அவரது நண்பர்களான இரு ஊடகவியலாளர் உட்பட 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இருந்து கல்முனைக்கு சென்றுகொண்டிருந்தனர்.
இதன்போது, பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலையத்துக்கு அருகில் மோட்டர் சைக்கிள்களை வீதி ஓரத்தில் நிறுத்தியபோது பின்னால் வந்த உழவு இயந்திரம் மோட்டர் சைக்கிளில் மோதியது.
இதனையடுத்து, உழவு இயந்திர சாரதியை கைது செய்துள்ள களுவாஞ்சிக்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.