தப்பியோடிய பாரவூர்தியின் சாரதி கைது!

லுணுகலை – பதுளை வீதியில், பசறை – 13ஆம் கட்டையில் நேற்றுக்காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில், 9 ஆண்களும், 5 பெண்களும் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், 5 சிறுவர்கள் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களுள், 20 ஆண்களும், 13 பெண்களும் அடங்குகின்றனர்.

குறித்த விபத்து இடம்பெற்றதை அடுத்து, விபத்துக்குள்ளான பேருந்துக்கு எதிர்த்திசையில் பயணித்த பாரவூர்தியின் சாரதி தப்பிச் சென்றிருந்தார்.இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir