ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரபட்சம் தொடர்கின்றது

அரச கூட்டணிக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரபட்சம் தொடர்கின்றது. அது இன்னும் குறையவே இல்லை.என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் இரவு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இது நாம் உருவாக்கிய அரசு. அதனுடன் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம். தேர்தலிலும் கூட்டணியாகவே பயணிக்க உத்தேசித்துள்ளோம். எனினும், கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டால் தொடர்ந்தும் மௌனம் காக்க முடியாது” – என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir