தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் சடலமாக மீட்பு!

வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

DSC00027

குறித்த ஆசிரியர் இன்றையதினம் அந்த பகுதியில் உள்ள குளத்தில் தாமரைப்பூவினை பறிப்பதற்காக சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவரை காணவில்லை.இதனையடுத்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தேடுதல் மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பில், காவற்துறையினருக்கு தெரியப்படுத்தினர்.நீண்ட நேரத்தின் பின்னர் குறித்த ஆசிரியரின் சடலம் குளத்தில் இருந்து பொதுமக்களால் மீட்கப்பட்டது.

DSC00016

குறித்த சம்பவத்தில் வவுனியா நகரப்பாடசாலை ஒன்றை சேர்ந்த பரந்தாமன் வயது33 என்ற ஆசிரியரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் ஆலயம் ஒன்றின் தேவைக்காக தாமைரப்பூவை பறிக்கச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

DSC00006

சம்பவம் தொடர்பில் வவுனியா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir