கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இதன்காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 566 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 92 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று(திங்கட்கிழமை) மாத்திரம் 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir