வத்தளையின் சில பகுதிகளில் 18 மணி நேர நீர் வெட்டு

வத்தளையின் சில பிரதேசங்களில் நாளை முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை (31) இரவு 10 மணி முதல் ஏப்பிரல் 1 ஆம் திகதி மாலை 4 மணி வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி வனவாசல, ஒலியமுல்ல, வத்தளை – நீர்கொழும்பு வீதி, எவரிவத்த வீதி, தெலங்கபத்த, மீகஹவத்த, ஹேகித்த, பல்லியாவத்த, வெலியமுன வீதி, பலகல, கலஹாதுவ, மரதான வீதி, எலகந்த மற்றும் ஹெந்தல வீதியின் ஒரு பகுதி ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir