இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 215 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 151 பேர் மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

12 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 49 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 303 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 2 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் 291 கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 88 ஆயிரத்து 914 அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 393 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோ

You May Also Like

About the Author: kalaikkathir