4 சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைது

பிலியந்தலை, கல்கிசை, அங்குலான போன்ற பிரதேசங்களில் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட 4 விசேட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின் ரக போதைப்பொருள் 9 கிராமுடன் 4 சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கதிர்காமம் பிரதேசத்தில் 6 கிலோ கஞ்சாவை தன்னகத்தே வைத்திருந்த 32 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றிவளைப்புகள் மேலும் முன்னெடுக்கப்படுவதுடன் போதைப்பொருள் தொடர்பில் நம்பகத் தன்மையான தகவல்கள் இருப்பின் காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir