6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன

இலங்கைக்கு இன்று (புதன்கிழமை) சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் கொண்டுவரப்படவுள்ளன.

அதன்படி இன்று முற்பகல் 11.30 மணியளவில் தடுப்பூசிகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளன.

சீனாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்படும் இந்த தடுப்பூசிகளை சுகாதார அமைச்சு பெற்றுக்கொள்ளவுள்ளது.

மேலும் இந்த தடுப்பூசிகள் முதற்கட்டமாக இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு மாத்திரம் வழங்கப்படவுள்ளது.

அதன் பின்னர், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னரே, அதனை இலங்கை பிரஜைகளுக்கு அவழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir