2.5 மில்லியன் இலஞ்சமாக பெற முயன்ற இருவர் கைது

மொறட்டுவ பகுதியில் அமைந்துள்ள விகாரையென்றின் பிக்குவிடமிருந்து 2.5 மில்லியன் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முயன்ற குற்றச்சாட்டுக்காக இருவரை கொழும்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கோரிய பணத் தொகையிலிருந்து ஆரம்ப கட்டமாக 5 இலட்சம் ரூபாவினை பெற முயன்றபோது நேற்றைய தினம் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் கைதான சந்தேக நபர்களை மொறட்டுவை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir