ரு இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் 12ஆம் திகதி நாட்டிற்கு வரும்

ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகளில் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் 12ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் முற்பதிவு செய்யப்பட்ட 7 இலட்சம் தடுப்பூசிகளின் முதற் தொகுதியே இவ்வாறு கிடைக்கவுள்ளதாக அந்தக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஏனையவற்றை மாதாந்தம் நாட்டிற்கு வழங்குவதற்கு அந்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. இவற்றில் முதலாம் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகளே எதிர்வரும் 12ஆம் திகதி கிடைக்கவுள்ளன.

இதேவேளை, ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டுள்ள 10 இலட்சம் அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்கும் திகதி குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir