78 போதை மாத்திரைகள்,கேரளா கஞ்சா வைத்திருந்த 29 வயது பெண்!

78 போதை மாத்திரைகள் மற்றும் கேரளா கஞ்சாவை வைத்திருந்த 29 வயதுடைய பெண்ணொருவரை இன்று இரவு பிறைந்துரைச்சேனை, பன்சாலை வீதியில் வைத்து வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட துரித நடவடிக்கையின் போதே இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணையும் கைப்பற்றப்பட்ட மாத்திரை, கஞ்சா போன்றவற்றையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அண்மைய தினங்களின் காகித ஆலை இராணுவப்புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கை காரணமாக இப்பிரதேசத்தில் போதை மாத்திரை, கேரளா கஞ்சா, கள்ள நோட்டுக்களுடன் பலர் கைது செய்யப்பட்டு சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், இவ்வாறான சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் அதீத அவதானஞ்செலுத்தி வருகின்றமையும் பாராட்டுக்குரியது.

You May Also Like

About the Author: kalaikkathir