பண்டிகை காலம் ; சாரதிகள் மீது விசேட கவனம்

எதிர்வரும் புத்தாண்டு வாரத்தினை முன்னிட்டு, சகல பிரதேசங்களிலும் வாகன சாரதிகள் மீது விசேட கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புத்தாண்டு காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் அதிகம் விபத்துக்கள் ஏற்படுவது வழமை. ஆகவே இவ்வாறு ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir