போதைப்பொருளுடனும் ஒரு மில்லியன் பணத்துடனும் ஒருவர் கைது

வத்தளை பகுதியில் போதைப்பொருள் மற்றும் 1,030,670 ரூபா பணத்தொகையுடன்,சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த  நபர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து 101 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir