ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று

ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று  நடைபெறவுள்ளது.

மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது எனக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir