வீதி விபத்துகளினால் நேற்று 13 பேர் பலி

நாட்டில் நேற்றைய தினம் வீதி விபத்துக்கள் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரழந்தவர்களில் 6 பேர் நேற்று பதிவான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆவர். ஏனையோர் அதற்கு முன்னர் பதிவான விபத்துக்களில் சிக்குண்டவர்கள் ஆவர்.

பண்டிகை காலத்தினை கருத்திற் கொண்டு போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் சாரதிகளும் பயணிகளும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir