மொராக்கோவின் கடற்கரையை அடுத்துள்ள தீவுக்கூட்டமான கேனரிக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை குடியேறிய படகொன்றில் நால்வர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக ஸ்பெய்னின் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
கேனரி தீவுகளில் மிகச் சிறிய ஒன்றான எல் ஹியர்ரோவின் தெற்கே 193 கி.மீ (120 மைல்) தொலைவில் ஒரு மீன்பிடி படகு மூலம் இந்த படகு முதலில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின்னர் மீட்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், மீட்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மூன்று ஹெலிகொப்டர்கள் மூலம் கொண்டு சென்றனர்.
படகில் இருந்த 23 பேரில் 16 பேர் “மோசமான நிலையில்” இருப்பதாகவும், சிறந்த நிலையில் உள்ள மூன்று பேர் டெனெர்ஃபைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இறந்த நான்கு பேரின் உடல்களும் எல் ஹியர்ரோவுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஸ்பெய்னின் கேனரி தீவுகளுக்கு ஆவணமற்ற குடியேறியவர்கள் மற்றும் அகதிகளின் எண்ணிக்கை 2019 ஐ விட அண்டைய ஆண்டுகளில் எட்டு மடங்கு அதிமாகும்.
2020 ஆம் ஆண்டில் 23,000 க்கும் அதிகமானோர் படகு மூலம் தீவுக்கூட்டத்திற்கு வந்தனர், அவர்களில் சுமார் 850 பேர் இறந்தனர் அல்லது வழியில் காணாமல் போயுள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு அமைப்பு கூறியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை 3,400 பேர் கேனரிகளுக்கு வந்துள்ளனர்.