கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணம்

கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணமென உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அத்தோடு, முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சஹ்ரானின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்துவிட்டு தற்போது, சமூகத்தின் மீது பழிபோடுவதை ஏற்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணமாகும்.

வடகிழக்கில் அவர்கள் கோலோச்சிய காலத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த பிரதேச செயலகத்தை இவ்வாறு பிரித்திருக்க மாட்டார்கள்.

ஆனால் புலிகள் முஸ்லீம் மக்களில் காழ்ப்புணர்ச்சி கொண்டு தமிழர் முஸ்லீம்களை நிரந்தரமாக பிரிப்பதற்காகவே இவ்வாறு செயற்பட்டார்கள்.

இதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் கல்முனை உப பிரதேச செயலக விடயத்தை ஒரு பொருட்டாக கருதாது அரசியல் செய்தமையும் இப்பிரச்சினை தொடர காரணமாகும்.

முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் காத்தான்குடி பகுதியில் குழப்பவாதியாக இருந்த சஹ்ரானுக்கு கைகொடுத்து தேர்தல் காலங்களில் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்ததை நாம் கண்டிருந்தோம்.

அவ்வாறு பிழைகளை செய்துவிட்டு கூலிக்கு செயற்பட்ட சஹ்ரான் குழு உருவாகுவதற்கு சமூகம் உள்ளவர்கள்தான் காரணம் என்ற கருத்துக்களை அவர் பரப்புவதை ஏற்கமுடியாது.

இவரது பேச்சுக்களை பார்க்கின்றபோது அவருக்கு சரியான விளக்கங்கள் இருக்கின்றதா என்பது தெரியவில்லை.

வழமையாகவே ரவூப் ஹக்கீம் பேசுகின்றபோது என்ன பேசுகின்றார் என்பது யாருக்கும் புரியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir