நலம் விசாரிக்க வந்த உறுப்பினர்களுக்குப் பிரதமர் நன்றி

ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌சவின் கால்டன் இல்லத்துக்குச் சென்று தமிழ் – சிங்களப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் சொந்த ஊரான அம்பாந்தோட்டை – தங்கல்லைக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு பாரம்பரியங்களைப் பேணி, நலம் விசாரிக்க வந்த உறுப்பினர்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்து, உபசரித்துள்ளார்.

நாட்டின் பாரம்பரியங்களுக்கு முதலிடம் வழங்கி, குடும்பத்தினருடனும் கிராம மக்களுடனும் புத்தாண்டைக் கொண்டாடுவதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir