காவற்துறைமா அதிபருக்கு நா.உ விஜயதாஸ கடிதம்

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்‌ச, தனது பாதுகாப்பைப்  பலப்படுத்தக் கோரி காவற்துறை மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அரசின் முறைகேடுகள் தொடர்பாக கருத்து வெளியிட்டதால், ஜனாதிபதி தன்னை அச்சுறுத்தியுள்ளார் எனவும் விஜயதாஸ எம்.பி. கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தொலைபேசி உரையாடலில் பயன்படுத்திய தொனி, தனக்கும் குடும்பத்துக்கும் உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தனது பாதுகாப்பை அதிகரிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறுகாவற்துறை மா அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்‌ச கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir