யாழில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் ஒருவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இருதய நோயினால் பாதிக்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

முதியவரின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் முல்லேரியாவிலேயே மின்தகனம் செய்யப்படவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir