18 மணித்தியாலங்களுக்குள் மது போதையில் வாகனம் செலுத்திய 905 பேர் கைது

நாடு முழுவதும் கடந்த 18 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது மது போதையில் வாகனம் செலுத்திய 905 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி பிற்பகல் 12 மணி முதல் நேற்று (19) காலை 6 மணி வரை இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உந்துருளி சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளில் அதிகளவானோர் போக்குவரத்து சட்டத்தை மீறி செயற்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir