நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று ஆரம்பம்

நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நாளை மறுதினம் மற்றும் வெள்ளிக்கிழமையன்று சபை ஒத்திவைப்பு வேளை யோசனையாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir