ஊடகவியலாளர் செ.ரூபனின் 11 ஆவது ஆண்டு நினைவு !

யாழ்ப்பாணம்- பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில், ஊடகவியலாளர் அமரர் செ.ரூபனின் 11 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நேற்று   மாலை 5 மணியளவில், பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் தலைமையில்  இடம்பெற்றுள்ளது.

இதன்போது ரூபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வு சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டிருந்தது.

இதில் பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன், வெண்கரம் செயலாளர் ஆசிரிய ஆலோசகர் திருமதி சு.சண்முகேந்திரன், ஊடகப்பணியாளரும் சமூக செயற்பாட்டாளருமான ந.பொன்ராசா, பொன்னாலை ஸ்ரீகண்ணன் சனசமூக நிலையத் தலைவர் செ.றதீஸ்வரன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.

இந்த நிகழ்வில், குறிப்பிட்ட சில மாணவர்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir