இலங்கையில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் மேலும் சில இடங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, 3 மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய பிரதேசத்திற்கு உட்பட்ட வெல்லவாய மாநகர சபை, வெஹரயாய, கொட்டம்கஹபொக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.​

அதேபால புத்தல – ரத்னகம முதலான கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தின் உகன – குமாரிகம கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாத்தளை மாவட்டத்தில் நாவுல – அளுகொல்ல கிராமசேவகர் பிரிவும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் குறித்த பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை இவ்வாறு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir