இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி; இன்று முதல் முன்னெடுப்பு

இரண்டாம் கட்டமாக ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் கூறியுள்ளதாவது,  “சுகாதார பணியாளர்களுக்கே  முதல் கட்டமாக இந்த ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் செயற்தபாடு இன்று முதல் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த செயற்பாட்டுக்காக 3 இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் தற்போது கையிருப்பில் உள்ளன.

இதேவேளை தடுப்பூசி பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடி, பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir