யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான கொரோனா விழிப்புணர்வு திட்டம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டமொன்று நேற்று காலை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விழிப்புணர்வு செயற்திட்டம் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ஹட்டகட்சியின் வழிகாட்டலில், தெல்லிப்பளை பொலிஸ் பரிசோதகர் மேர்சன் இந்துக சில்வாவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

பேருந்துகளில் பயணிப்பவர்கள், சந்தைகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், வர்த்க நிலையங்களில் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதன்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு, சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து தெளிவுப்படுத்தப்பட்டது.

இதேவேளை முகக்கவசம் அணியாத பலர், கடுமையான எச்சரிக்கப்பட்டு பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir