பருத்தித்துறையில் 95 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

பருத்தித்துறையில் 95 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருளை வேன் ஒன்றில் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.

பருத்தித்துறை சுப்பர்மடம் சுடலைக்கு முன்பாக இந்த கைது நடவடிக்கை இன்று அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்றது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சுடலைக்கு முன்பாக வான் ஒன்றில் ஏற்பட்ட முற்பட்ட போது, காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்தனர். மற்றொரு சந்தேக நபர் தப்பித்துள்ளார்.

45 பொதிகளில் 95 கஞ்சா போதைப்பொருள் சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir