இன்று காலை 10 மணிக்குக் கூடவுள்ளது  நாடாளுமன்றம்

இதற்கமைய காலை 10.00 மணி முதல் 11.00 மணிவரையான காலப் பகுதியில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின்கீழான கட்டளை, மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான 04 அறிவித்தல்கள், சேர்பெறுமதி வரி(திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை விவாதத்துக்கு எடுப்பதற்கு கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்ததாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூல விடைக்கான கேள்விகளை முன்வைப்பதற்கும், 27 (2) நிலையியற் கட்டளையின் கீழ் கேள்விகளை முன்வைப்பதற்கும் நேரம் ஒதுக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நாளை 05 ஆம் திகதி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை விவாதத்துக்கு எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir