எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானிக்கவில்லை!

உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்துள்ள போதிலும் , இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் எரிபொருள் விலை தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

உலக சந்தையில் எரிபொருள் அதிகரித்துச் செல்வது சகலரும் அறிந்த விடயமாகும்.

எனவே இலங்கையிலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்று எந்தவொரு யோசனையும் அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துச் செல்வது உண்மையாகும். ஆனால் இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir