இன்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.

கடந்தமுறை இடம்பெற்ற உள்ளூராட்சிசபை தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ்பிரதேச சபை மற்றும் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் ஆட்சியினை தமிழ் தேசியகூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.

இதற்கமைய சபையின் தவிசாளர் பதவியினை ஆட்சிகாலப்பகுதியில் இரண்டரை வருடங்கள் என பங்கிட்டு வகிப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் விடுதலை கழகம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய கட்சிகளிற்கிடையில் புரிந்துணர்வு ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

அதற்கமைய வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர்கள் தமது பதவியில் இருந்து விலகினர்.

கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir