ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர்

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54ஆவது கூட்டம் இன்று (புதன்கிழமை) மெய்நிகர் வழியாக  நடைபெற்றது.

இதன்போததே, 2021/2022ஆம் ஆண்டுக்கான ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஜோர்ஜியாவின் திபிலிசியில் முதலில் நடத்தத் திட்டமிடப்பட்ட வருடாந்த கூட்டம் தற்போதைய கொரோனா தொற்றுநோயால் மெய்நிகர் வடிவத்தில் நடைபெற்றுள்ளது.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் 55 ஆவது ஆண்டுக் கூட்டம் அடுத்த ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir