போதைப் பொருட்களுடன் நபர் ஒருவர் கைது

ஒரு தொகை போதைப் பொருட்களுடன் புளுமென்டல் பகுதியில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவற்துறை விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வௌிநாட்டில் உள்ள போதைப்பொருள் வர்த்தகர் கிம்புலாஎல குணாவுடன் தொடர்பில் உள்ள நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த நபரிடம் இருந்து 4.527 கிலோ ஹஷ் எனும் போதைப்பொரும் 2.22 கிலோ ஐஸ் எனும் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir