மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

மட்டக்களப்பு வாழைச்சேனை கொழும்பு பிரதான வீதி மியான்குளப் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (06) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த கொழும்பு மட்டக்களப்பு பஸ்வண்டி உரிமையாளரான 31 வயதுடைய பரமேஸ்வரன் தனுஜன், 31 வயதுடைய டினேகா என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir