ஹெரோயினுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவரை நேற்று (06) மாலை கைது செய்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவதினமான நேற்று மாலை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து குறித் இளைஞனை காவல்துறையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது அவரது உடமையில் இருந்து 70 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir