கிளிநொச்சி காவல்துறையினர் 23 பேருக்கு கொரோனா

கிளிநொச்சி காவல் நிலையத்தில் கடமையாற்றும் 23 காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி இன்று வெள்ளிக்கிழமை (07) கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறையினருக்கு அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதில் 23 காவல்துறையினருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து காவல் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தொற்று கண்டறியப்பட்டவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir