6 புதிய வைத்தியசாலைகள் அமைக்க முடிவு

இலங்கையில் நாளாந்தம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், புதிதாக 06 வைத்தியசாலைகளை ஸ்தாபிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கொரோனா அவசர சிகிச்சை மற்றும் சுகாதாரக் கட்டமைப்புக்காக முன்னாயத்த செயற்றிட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயசுந்தர பண்டார ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கொரோனா நோயாளர்களுக்காக மேலும் 60 ஆயிரம் கட்டில்களைத் தயார் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

நாட்டிலுள்ள 32 வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றும் செயற்றிட்டம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் நிறைவு பெறும் எனவும் மருத்துவர் ஜயசுந்தர பண்டார சுட்டிக்காட்டினார்.

You May Also Like

About the Author: kalaikkathir