மருத்துவமனைகளில் இடம் இல்லை தொற்றாளர்கள் இருதய தீவிர சிகிச்சைப் பிரிவில்!

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க தீவிர சிகிச்சை பிரிவுகளில் பற்றாக்குறை நிலவுகின்றது எனக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் நிபுணர் மருத்துவர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இருதய நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. ஆனால், நாங்கள் தற்போது கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அவர்களை இடம் மாற்றப் போகின்றோம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மகப்பேற்றியல் மற்றும் பெண்ணோயியல் நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் பிரதீப் டி சில்வா, “கொரோனா நோயாளிகளுக்கு மாத்திரம் பிரத்தியேகமான தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளதா என்பது தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது – என்றார்

You May Also Like

About the Author: kalaikkathir