அரசியல் கட்சிகள் பதிவு தொடர்பான அறிக்கை

அரசியல் கட்சிகளை பதிவு செய்வது தொடர்பான பரீசீலனை அறிக்கை எதிர்வரும் 18ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நேர்முகத்தேர்வில் தெரிவான கட்சிகளின் பெயர்களை அறிக்கையொன்றின் ஊடாக வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வுகள் கடந்த சில நாட்களாக தேர்தல்கள் ஆணைக்குழு காரியாலயத்தில் இடம்பெற்றதுடன் அதில் 18 கட்சிகள் தகுதி பெற்றன.

எவ்வாறாயினும், அதில் பெரும்பாலான கட்சிகள் நேர்முகத்தேர்வில் தேவையான காரணிகளை பூர்த்தி செய்யவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir