மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

குருநாகல் மாவட்டத்தின் கும்புக்கெட்டே காவல்துறை பிரிவிற்குட்பட்ட நிகதலுபொத கிராம சேவகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை முதல் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,

மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகள்.

மாத்தளை மாவட்டத்தின் ரத்தொட்ட காவல்துறை பிரிவிற்குட்பட்ட உடஹபுவிட கிராம சேவகர் பிரிவு.

கண்டி மாவட்டத்தின் கடுகன்னாவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட வலகம்பாய கிராம சேவகர் பிரிவின் திப்புட்ட கிராம் மற்றும் கொஸ்கஸ்தென்ன கிராமம்.

புத்தளம் மாவட்டத்தின் கொஸ்வத்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட மெத கிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவு.

மேற்குறிப்பிடப்பட்ட பிரதேங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir